𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - VIZHIYILE MANI VIZHIYIL MOUNA MOZHI PESUM ANNAM UNDHAN VIRAL PADUM IDANGALIL PONNUM MINNUM - TAMIL SONG LYRICS

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களின் வேதங்கள் நீ ஓதலாம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதி இனம் உடல் மலர் வனம் இதழ் மரகதம் அதில் மது ரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நக வரி

இன்ப சுக வரி அன்பின் முகவரி கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களின் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக