𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - OORVASI OORVASI TAKE IT EASY OORVASI OOSI POLA UDAMPIRUDHAA THEVAI ILLA PHARMACY VAAZHKAIYIL VELLAVE TAKE IT EASY POLICY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிஸி 
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டஸி 
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே இரண்டு சொல்லடி குறைந்த பட்சம்
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிஸி 

ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா டேக் இட் ஈஸி பாலிஸி 
ஒழுங்கா படிச்சும் ஃபெயிலா போனா டேக் இட் ஈஸி பாலிஸி 
தண்டசோருன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈஸி பாலிஸி 
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி 
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம் ?
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிஸி 
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டஸி 

கண்டதும் காதல் வழியாது கண்களால் ரத்தம் வழியாது
பூனையில் சைவம் கிடையாது ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு தனியா சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா டேக் இட் ஈஸி பாலிஸி 
பக்கத்து சீட்டுல பாட்டி உக்காந்தா டேக் இட் ஈஸி பாலிஸி 
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈஸி பாலிஸி 
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈஸி பாலிஸி 

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிஸி 
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டஸி 

பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்தென்ன பயன் ?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன் ?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன் ?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக