𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - NEE ENBATHU EDHUVARAI EDHUVARAI NAAN ENBATHU ADHUVARAI ADHUVARAITHAAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நீயென்பது எதுவரை ? எதுவரை ? நானென்பது எதுவரை ? எதுவரை ?
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி ?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி !
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது

நீயென்பது எதுவரை ? எதுவரை ? நானென்பது எதுவரை ? எதுவரை ?
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்

ஏதோ நான் இருந்தேன் என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை
மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகலிங்கே தொடுவானம் போனதெங்கே ?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன்நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா ?

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி ?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி !
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக