𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 8 அக்டோபர், 2025

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு பொய்யாவது 
சொல் கண்ணே
உன் காதல் 
நான் தான் என்று
அந்த சொல்லில் 
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் 
உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா 
என் நெஞ்சம் ?

பெண்மையும் 
மென்மையும்
பக்கம் பக்கம்தான்
ரொம்பப 
பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
வேறுதான்

பாலுக்கும் 
கள்ளுக்கும்
வண்ணம் 
ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் 
ஒன்றுதான்
உண்டால் 
ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் 
செய்தாரோ ?


நிலவின் ஒளி திரட்டி
கண்கள் செய்தாரோ ?

விண்மீன் விண்மீன் 
கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் 
கொண்டு
கைரேகை செய்தானோ ?

வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ ?
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் 
செய்து வைத்தானோ !

காதல் கண்ணே
உள்ளம் கல்லில் 
செய்து வைத்தானோ !


நிலவினை எனக்கு 
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் 
சொன்னதும் நீதானே !

காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் ? யார் ?
என் அன்பே நீதானே

கங்கை கங்கை 
ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை 
கண்ணில்
கையில் தந்தவன் நீதானே

ஆனால் பெண்ணே 
நெஞ்சை மட்டும் 
மூடி வைத்தாயே
காதல் கண்ணே 
நெஞ்சை மட்டும் 
மூடி வைத்தாயே !

2 கருத்துகள்:

  1. ஆமை ஓடு வெளிய தெரியுது. தலைவன் சறுக்குனா மேல ஏறி ஆடறானுங்க..

    பதிலளிநீக்கு
  2. ஏழையா இருக்கறவன்தான் சந்தோஷமான வாழ்க்கை வாழறான்னு தமிழ் சினிமா உருட்ட இன்னுமே நம்பி நடிகனுக்கு ஆதரவு தரவன் ஏமாந்த சோணங்கிதான்.

    பதிலளிநீக்கு