இப்போது எல்லாம் AI வந்த பின்னால் இசையை கம்ப்யூட்டரே கிரியேட் பண்ணும் அளவுக்கு சக்திகளை கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. நிறைய மியூசிக் இருக்கிறது நிறைய பாடல்கள் இருக்கின்றன ஆனால் கேட்க யாருக்குமே எண்ணம் இல்லை. GEN Z மிகைப்படுத்தபட்ட பொழுதுபோக்கு பேச்சுக்களில் கவனம் செலுத்துகிறது. பாடல் வரிகளுடைய அர்த்தம் புரிந்து பாடல் கேட்க கூட அவர்களால் முடிவதே இல்லை என்பதே நிதர்சனம்! பாடல்களுக்கு GEN Z இடம் போதுமான ஆதரவு இல்லை.
மேலே நாட்டு அளவற்ற கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற கனவில் மேலை நாட்டு இசைக்கு மயங்கி கிடக்கின்றனர். சொந்த சினிமாக்களின் தரம் குறைவானது சொந்த சினிமாக்களின் இசை குறைச்சலானது என்று மேலை நாடு கலைஞர்களுக்கு கிரீடம் அணிவிப்பது நமது இசையை தரம் தாழ்த்துவதில் எனக்கு பெர்ஸனலாக உடன்பாடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்,
இருந்தாலுமே ஒரு நாளில் நமது இசையின் அருமையை இந்த உலகம் புரிந்துகொள்ளும் தருணம் வரும் என்ற நம்பிக்கையில் இந்த போஸ்ட்டை நான் முடிக்கிறேன். இது ஒரு கருத்துப்பகிர்வு போஸ்ட்தான். குறைவாக எண்ணவேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக