𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - இங்கே பார்டர்லைன் பெர்ஸனாலிட்டி டிஸ்ஸார்டர் என்றால் என்ன ? BPD - EXPLAINED IN TAMIL !




பார்டர்லைன் தன்மை குறைபாடு (BPD) என்பது தீவிரமான, விரைவாக மாறும் உணர்ச்சிகள், நிலையற்ற உறவுகள், திடீர் முடிவுகள், மற்றும் எளிதில் பாதிக்கப்படும் சுய உணர்வு ஆகியவற்றால் குறிக்கப்படும் மனநலம் தொடர்பான ஒரு நிலை. 

உதாரணமாக, ஒரு சாதாரண மனிதர் நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டால் அவர் கவலைப்பட்டு, சற்று நேரம் அமைதியாகி, பின்னர் அமைதியாக பேசி பிரச்சினையை தீர்ப்பார். 

ஆனால், BPD உடைய ஒருவர் மிகுந்த கோபத்திலோ ஆழ்ந்த துயரத்திலோ பதிலளிக்கலாம், நண்பர் தன்னை கைவிடப் போகிறார் என்று பயப்படலாம், பல உணர்ச்சிமிகு செய்திகளை அனுப்பலாம், பின்னர் குற்ற உணர்ச்சி அல்லது வெற்றிட உணர்வு அடையலாம். 

ஒரு சாதாரண மனிதரின் உணர்வுகள் அளவானதும் தற்காலிகமானதுமான நிலையில் இருக்கும் போது, BPD உடையவர் சில மணி நேரத்துக்குள் மனதின் உணர்ச்சிகளில் அதிகபட்ச மிகுந்த உயர்வுகளும் தாழ்வுகளும் அனுபவிப்பார்

எதிர்வினைகளை கட்டுப்படுத்தவும், சூழ்நிலைகளை உணர்ச்சியால் சிதைக்காமல் புரிந்துகொள்ளவும் போராடுவார், இது மீண்டும் மீண்டும் மோதல்களுக்கும் உள்மனதின் கலக்கத்துக்கும் வழிவகுக்கும். BPD உடையவர்கள் உலகத்தை பெரும்பாலும் “முழுவதும் நல்லது” அல்லது “முழுவதும் கெட்டது” என்ற இரு  வடிவங்களில் மட்டுமே பார்க்கும் பழக்கத்துடன் இருப்பார்கள்.

இதனால், ஒருவரைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் மிகக் குறுகிய நேரத்தில் மிகுந்த மாறுபாட்டுக்குள்ளாகலாம். உதாரணமாக, ஒரு சாதாரண மனிதர் நண்பர் ஒருவர் சேர்ந்து சினிமா போகும் திட்டத்தை ரத்து செய்தால் குறைந்த பட்சம் ஃபோன் பேசும்போது எடுக்காமல் போனால் கூட அவர்கள் பிஸியாக இருக்கலாம் என்று எளிதாகக் கருதுவார். ஆனால், BPD உடைய ஒருவர் உடனடியாக துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்து, அந்த நண்பர் இனி கவலைப்படவில்லை என்று நம்பி, திடீரென தொடர்பை நிறுத்தக்கூடும். 

இந்த “முழுமையாக உணர்வை எரிமலை போல வெடிக்க வேண்டும் அல்லது ரேயாக்ஸன் என்று ஒன்றுமில்லை” என்ற சிந்தனை ஆழமான மற்றவர்களால் கைவிடப்படுவதற்கான பயத்துடன் இணைந்திருப்பதால், தீவிரமான பிணைப்பு மற்றும் திடீர் நிராகரிப்பு என்ற சுழற்சிகளை உருவாக்குகிறது. காலப்போக்கில், இந்த முறைகள் உறவுகளை பாதிக்கவும், தன்னம்பிக்கையை குறைக்கவும், அன்றாட தொடர்புகளை BPD உடையவருக்கும், அவரைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் உணர்ச்சிமிகு சுமையாக மாற்றவும் வழிவகுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக