𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 13 நவம்பர், 2024

MUSIC TALKS - THIRUPAACHI ARUVAALA THEETIKITTU VAADAA VAADAA - WHY ? NU KELVI KEKKAMA ? YOSIKKAMA VAADA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




திருப்பாச்சி அரிவாளை 
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையுன்னு 
தெரிய வைப்போம் வாடா வாடா

எட்டு திசை திறந்திருக்கு 
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிற்க்கும் சூரியனை 
எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் 
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் 
புலி நகமா மாறும் வாடா

வெள்ளாட்டுக் கூட்டமுன்னு 
வெளிய சொன்ன ஆளுகளை
வெள்ளாவியில் போட்டு 
வெளுத்துக்கட்டு வாடா வாடா


எங்கூரு பொம்பளைய 
மோப்பமிட வந்தவனை 
எங்க சியான் மூக்கறுத்தாக

எங்காட்ட திருடித் தின்னு 
சப்புகொட்டு நின்னவன
எங்க ஆத்தா நாக்கறுத்தாக

எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு
குளித்தலையில் மணமணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக !

நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச 
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டியம்மா கறி சமைச்சீங்க ?

அட கோம்பா மாந்தோப்புல
கொலகொலயா காய் திருடி
கோவணத்தத் தவறவிட்டீக !

அந்த கோவணத்தக் கொண்டுபோய்
அப்பனுக்கு செலவில்லாம 
ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக !!

அட களவாணி கோத்திரமே 
காளை மாட்டு மூத்திரமே 
எப்ப நீங்க திருந்தப்போறீங்க

திருப்பாச்சி அரிவாளை 
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா

எட்டு திசை தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியனை 
எட்டித்தொடு வாடா வாடா

உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையில் அடி 
பரம்பரையா எங்க கொள்கையடா

மானந்தானே வேட்டி சட்டை 
மத்ததெல்லாம் வாழை மட்டை 
மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா 
சோறு போட்டு விசிறிவிடும்
ஈரம் உள்ளது எங்க வம்சமடா

சோறு போட்டும் கழுத்தறுத்தா 
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரம் தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரி புலிதான் தோத்ததில்லையடா

எங்க உறையவிட்டு வாளெடுத்தா
ரத்தருசி காட்டிவைக்கும்
வழக்கமெங்க குலவழக்கமடா

நான் தட்டிவெச்சா புலியடங்கும்
எட்டு வெச்சா மலை நொறுங்கும் 
தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா

[இந்த பாட்டு என்டேர்டேன்மேன்ட் பேர்ப்போஸ்க்கு எடுக்கப்பட்டாலும் டேஸ்க்ரிமேஷன் பண்ணுபவர்களின் தேசிய கீதமாக மாறியது கால கொடுமை. மனித தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் மக்களே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக