𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 7 ஜூலை, 2024

MUSIC TALKS - CHINNA CHINNA VANNA KUYIL KONJI KONJI KOOVUDHAMMA PURIYATHA ANANADHAM PUTHITHAKA AARAMBAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU ! [PENDING]



சின்னச் சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் 
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்னச் சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

மன்னவன் பேரை சொல்லி 
மல்லிகை சூடி கொண்டேன் 
மன்மதன் பாடல் ஒன்று 
நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்

சொல்ல தான் எண்ணியும் 
இல்லயே பாஷைகள் 
என்னவோ ஆசைகள் 
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன்
சன்னிதி காண காண

மேனிக்குள் காற்று வந்து 
மெல்லத் தான் ஆடக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் 
கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையோ 
இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால் 
தொல்லையே தொல்லையே
காலம் தோறும் கேட்க வேண்டும் 
காலம் தோறும் கேட்க வேண்டும் 
பருவம் என்னும் கீர்த்தனம் 
பாட பாட நீ பாட பாட

சின்னச் சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் 
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்னச் சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக