𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 7 ஜூலை, 2024

GENERAL TALKS - பிரபஞ்ச சக்திகளை தடுக்க வேண்டும் !



ஒரு மனிதனுக்கு எப்போதுமே கௌரவமாக வாழ்க்கையை நடத்ததான் ஆசை இருக்கிறது. மற்றவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்பது நிஜமான கௌரவம் அல்ல. வாழ்க்கையில் நமக்கு தேவையான எல்லா விஷயங்களுமே நம்மோடு இருந்தால்தான் அது கௌரவமான வாழக்கை. இந்த உலகத்தில் யாரையும் சாராமல் வாழ வேண்டும். யாரையும் நம்பிக்கொண்டு இருக்கவும் கூடாது. நம்பிக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே ஒரு கட்டத்தில் நம்மை தரையோடு தரையாக நசுக்கி விடுவார்கள் இல்லையென்றால் தண்ணீரோடு தண்ணீராக அமுக்கி விடுவார்கள். இது உங்களுடைய பெற்றோர் , சகதோதாரர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் என்று எல்லோருக்குமே பொருந்தும். இந்த உலகத்தில் கௌரவமான வாழ்க்கையை அடைவது பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் அடைவதற்கு சமமானது. நமக்கான பாதையை அமைப்பதிலும் நமக்கான போர் தளவாடங்களை உருவாக்க வேண்டும் என்பதிலும் இந்த கௌரவம் அடங்கியுள்ளது. கௌரவத்தை விட்டுக்கொடுக்கும் மனிதன் கொடிய கேட்ட பழக்கங்களுக்கு அடிமையாக மாறுகிறான். பணத்தை வரையறை இல்லாமல் நன்றாக செலவு செய்து பின்னாட்களில் உதவிகள் இல்லாமல் கஷ்டப்படுகிறான். இந்த வாழக்கை உங்களை சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருப்பது போலவே உங்களுக்கு தோன்றும் ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாழக்கை உங்களை ஒரு கார்பன் ஸ்டீல் கத்தியால் இதயத்தை குத்திவிடவும் தயாராக இருக்கும். இந்த வாழ்க்கையை எப்போதுமே கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். நமக்கான சாப்பாடு , தூக்கம் , குளியல், கழிவு நீக்கம் , பாதுகாப்பு ,  என்று அடிப்படையான தேவைகள் ஒரு மனிதனுக்கு இருக்கிறது. சொந்த வீடு , குடும்ப பாதுகாப்பு , மெடிக்கல் செலவுகள் என்று சராசரி மனிதனை கடைசி வரைக்கும் அவனுடைய வாழ்க்கையின் கௌரவத்தை அடையாமல் அவனுடைய சக்திகளை அதிகப்படுத்த விடாமல் செய்ய பிரபஞ்ச சக்தியாளர் நன்றாக சதிவேலைகளை செய்வார் என்பதால் இந்த சதிகளை முறியடித்து பிரபஞ்ச சக்திகளை நன்றாக தோற்கடிக்க வேண்டும். ஒரு அரைக்கும் இயந்திரத்தை கொண்டு இந்த பிரபஞ்ச சக்திகளை அரைத்தால்தான் நாடு நன்றாக இருக்கும். வாழ்க்கையை நம்ப வேண்டாம். காலத்தை நம்ப வேண்டாம். உங்களுடைய கௌரவத்தை மட்டுமே நம்புங்கள். கௌரவம் உங்களை வித்துக்கொடுக்காது. இந்த கௌரவத்தை உருவாக்க நல்ல மூளை தேவைப்படுகிறது. மற்ற விஷயங்களால் உருவாக்கபடும் கௌரவம் அவ்வளவாக நிலைத்து நிற்காது இருந்தாலும் சிறப்பான பின்னணி கணிப்புகளால் நுண்ணறிவு மிக்க செயல்படுகளால் உருவாக்கப்படும் கௌரவத்துக்கு ஆயுள் கெட்டியாக இருக்கும். மூளையற்றவர்கள் இந்த விஷயங்களில் இருந்து பின்வாங்கிக்கொள்வதே சிறந்தது. கௌரவத்தை உருவாக்க நாம் சிறப்பு யோசனைகளை பயன்படுத்தவில்லை என்றால் கஷ்டங்கள் எல்லாம் நம்முடைய உயிருக்கு ஆபத்து கொடுக்கும் அளவுக்கு இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். இது கடினமானது என்று புரிந்ததால்தான் நான் தனியாக போராடி கஷ்டப்படுகிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக