𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 25 ஜூலை, 2024

GENERAL TALKS - திரைப்படங்கள் காலியாக காரணம் என்ன ?


எப்போதுமே திரைத்துறை நன்றாக இருந்ததே இல்லை. திரைப்பட துறையை சப்போர்ட் பண்ணும் யாராக இருந்தாலும் அந்த துறையில் குற்றங்கள்தான் மொத்தமாக இந்த காலத்தில் அதிகமாகி இருப்பதை நீங்கள் பார்க்கலாம் ! குறிப்பாக தி பாய்ஸ் மற்றும் கேம் ஆஃப் த்ரான்ஸ் போன்ற தொடர்கள் நிறைய கிளாமர் கன்டேன்ட்களை கொடுத்து மக்களை மாஸ் மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மார்டின் ஸ்கார்ஸிஸ் ஆவேஞ்சேர்ஸ் படங்கள் எல்லாம் படங்களே இல்லை என்று சொல்கிறார் ! இன்னொரு பக்கம் தமிழ் படங்களிலில் விஜிலன்டிஸம் எல்லாம் நடைமுறையில் நடக்காத ஒரு கற்பனைதான் என்று விவரிக்கிறார் ! சமீபத்தில் சினிமா தியேட்டர்கள் வசூல் இல்லாமல் மூடப்படுகிறது. வெளிநாட்டு ஃபிக்ஷன் வொர்க்குகள் நல்ல ஆடம்பரமாக நிறைய பணத்தை செலவு பண்ணி எடுப்பதால் அவைகள் சூப்பர் ஹிட் ஆவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மக்களுடைய பொழுதுபோக்குக்கு பெஸ்ட் என்னவோ அதனைத்தான் இவர்கள் கொடுக்கிறார்கள் ! பெஸ்ட்டான விஷயமே மக்களுக்கு கிடைக்கிறது என்பதால் மக்கள் சாதாரணமாக சின்ன பட்ஜெட் அல்லது புதிய வகை கதைகளை கவனிக்க தவறி விடுகிறார்கள். உதாரணத்துக்கு என்ன படத்தை சொல்லலாம் ? திரையின் மறுபக்கம் என்று ஒரு ஷார்ட் பிலிம் குவாலிடியில் எடுத்த தமிழ் படத்தை சொல்லலாம் ! இந்த படம் போல ப்ரொடக்ஷன் பட்ஜெட்டில் சின்னதாக ஒரு சின்ன சிம்பிள் கதையை சொல்லும் படங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் ஆனால் பெரிய பட்ஜெட் படங்களிலின் வண்ணங்களில் காணாமல் போய்விடுகிறது ! சூ மந்திரகாளி என்று ஒரு படம் 2021 ல் வெளிவந்தது (படத்தை பார்த்தால் 2011 ல் வெளிவந்த படம் போல இருக்கும் அது வேறு விஷயம் ! படம் நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் பெரிய வெற்றியை கொடுக்க முடிவது இல்லையே ? இந்த விஷயத்தை கண்டிப்பாக மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும். நம்ம ஊரு படங்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்க வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக