குறிப்பாக ஒரு எழுத்தாளருடைய வாழ்க்கையில் நடக்கும் சுவரஸ்யமான சம்பவங்கள் இந்த படத்தில் கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தால்தான் இந்த படத்தை மிகவும் நன்றாக எதிர்பார்த்து இருந்தேன். நிறைய வேலைகள் இருந்தாலும் ஒரு முறையாவது இந்த படத்தை நான் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டேன். ஆனால் நீங்கள் ஒரு தரமான ஸ்பை படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு மிக மிக சிறப்பான படைப்பாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் வேற லெவல் படமாக இருக்கிறது.ஆர் கேல் என்ற ஸ்பை கதாபாத்திரத்தை அவருடைய கதைகளின் மூலம் உருவாக்கி உலக அளவில் நற்பெயரை கொண்டுள்ள ஒரு நாவல் எழுத்தாளர் ஒரு கட்டத்தில் அவருடைய உண்மையான வாழ்க்கையிலும் அந்த கதாபாத்திரத்தில் அந்த கதைகளில் நடப்பது போலவே நிஜமான க்ரைம் ஆர்கனைசேஷன்களும் அவளை கொல்ல முயற்சிக்கும் மோசமான வில்லன்களும் இருப்பதை உண்மையாகவே அரசாங்கத்துக்கு வேலை செய்யும் உளவு அதிகாரியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார். இப்போது யாரையுமே நம்ப முடியாத நிலையில் அவருடைய வாழ்க்கையில் அந்த நொடி வரைக்கும் அவருக்கு உதவியாக இருக்கக்கூடிய ஒரு திறமை மிக்க உளவுத்துறை அதிகாரியுடன் நடக்கக்கூடிய அத்தனை சண்டைகளையும் சமாளித்து எப்படியோ ஆபத்துக்களில் தப்பிக்கிறார் இவ்வாறு இன்டர்வேல் வரைக்கும் இந்த படம் சென்றால் இன்றும் விளக்கு மேல் இந்த படத்தை வேற லெவலில் ஒரு திருப்பு முனையை வைத்து மரண மாஸ் காட்டியுள்ளார்கள். இந்த வேற லெவல் டெஸ்ட் என்னவென்று இரண்டாம் பாகத்தில் இந்த படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் மற்றபடி இன்டர்வலுக்கு பின்னால் நடக்கும் காட்சிகளில் கதாபாத்திரங்களின் வேகமும் சண்டை காட்சிகளும் துருதுறுப்பும் இரண்டு மடங்காக நகர்கிறது. இன்னும் சொல்லப்போனால் நின்று பேச நேரம் இல்லாமல் சண்டையாகவே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படம் ஸ்மார்ட்டாக எடுத்த படம் இருந்தாலும. இந்த படம் எதனால் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் கலெக்ஸன் எடுத்து வெற்றியடையவில்லை என்பது இன்னுமே எனக்கு புரியாத புதிராக மட்டும் தான் இருக்கிறது !!! மேலும் விமர்சனங்கள் இந்த படத்துக்கு நெகட்டிவ் ரிவியூ கொடுத்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த காலத்தில் விமர்சனங்கள் விமர்சனம் பண்ணுபவர்கள் வயதாகிவிட்டவர்களாக மாறி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறதுகிங்ஸ்மேன் படங்களில் இருப்பதே போல ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சிறப்பான சண்டை காட்சிகள் ஸ்டைலான வசனங்கள் ஸ்டைலான காஸ்டியூம்கள் இந்த படத்தில் இருப்பதால் கிங்ஸ்மேன் படங்களின் சேம் யூனிவேர்ஸில் இந்த படம் இருப்பதாக கிளைமாக்ஸ் கொடுத்தது வேற லெவல். இயக்குனருக்கு கண்டிப்பாக பாராட்டுக்கள். இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இந்த வலைப்பூ உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இன்னும் நிறைய சப்போர்ட் கொடுத்து இந்த வலைப்பூவுக்கு வெற்றியை கொடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக