காடுகள் காணாமல் போவது பற்றி பேசவே கூடாது ஆனால் நம்ம வாழ்க்கையில் கடைகளில் பொருட்கள் விலை ஏறுவதை பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும், இது எந்த வகையில் நல்ல விஷயம் என்று எனக்கு புரியவே இல்லை. காடுகளை காப்பாற்றுவது என்பது மிகவும் பெரிய ப்ராஜக்ட். உலகம் முழுக்க உயிரினங்களின் பாதுகாப்பு காடுகளை காப்பாற்றி வைப்பதில்தான் இருக்கிறது. இந்த காலத்தில் நம்முடைய செயற்கை உணவு கண்டுபிடிப்புகளால் நிறைய உடல்நலக்குறைவுகள் உருவானாலும் உடல்நலம் குறைந்தால் குறைந்துவிட்டு போகட்டும் ஆனால் கண்டுபிடிப்புகளை காம்மேர்ஷியலாக விற்பனை பண்ணுவதில் மட்டும்தான் கவனம் வேண்டும் என்ற தவறான அணுகுமுறைகள் உணவு விற்பனை துறையில் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். காடுகள் பராமரிக்கப்பட்டால் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து தூய்மைப்படுத்தப்பட வேண்டிய விஷயங்களும் முறையாக தூய்மைப்படுத்தப்பட்டு நம்முடைய கடந்த காலத்தில் விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்கு எவ்வளவு மழைப்பொழிவும் இயற்கையின் சுகாதார சூழற்சியும் கிடைக்க வேண்டுமோ அவ்வளவு விஷயங்கள் மறுபடியும் இந்த நடப்பு காலத்தில் கிடைத்தால்தான் இயற்கை நன்றாக இருக்கும் மேலும் இயற்கையான உணவுகளின் தரம் உலக அளவில் மேம்பாடு அடையவும் உணவுப்பொருட்கள் விலையை குறைக்கவும் உதவிகரமானதாக இருக்கும் என்பதுதான் இங்கே என்னுடைய தனிப்பட்ட கருத்து. எப்போதுமே நம்முடைய சிவில் விஷயங்களின் கண்மூடித்தனமான அதிகாரத்தால் இயற்கையையே கேன்ஸல் பண்ணிவிடலாம் என்று ஒரு முடிவை எடுத்துவிட கூடாது. கண்டிப்பாக அது தவறான விஷயம் ஆகும். நாகரீகம் என்பது வளங்களை மேம்படுத்துதலில் அல்லவா உள்ளது ? நான் எப்போதுமே காடுகளால் உருவாகும் மழைப்பொழிவு இந்த உலகத்தின் உணவு பற்றாற்குறையை சரிசெய்ய ஒரு சிறப்பான வழிமுறை என்ற கருத்தில் நம்பிக்கை வைத்து இருக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக