𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 23 ஜனவரி, 2024

TAMIL TALKS EP. 26 - டிஜிட்டல் பணம் சம்பாதிப்பு - கொஞ்சம் விஷயங்கள் !!







டிஜிட்டல் பணம் சம்பாதிப்பு குறித்த ஒரு சில விஷயங்களில் பொதுவாக நான் அனுபவப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களை மட்டும்தான் இப்போது நான் பதிவு பண்ணப்போகிறேன். 2022 களில் ஸ்டாக் போட்டோக்ரபி மிக்கவுமே இலாபகரமான தொழிலாக எனக்கு பட்டது. நானும் கேமராவை வாங்க என்னால் ஆன முயற்சிகளை பண்னினேன். ஒரு 10 லட்சம் முதலீட்டில் 3 ஆட்டோக்கள் வாங்கினால் பயணிப்பவர்களால் எவ்வளவு தொகை கிடைக்குமோ அதே தொகையானது தரமான போட்டோக்ராபி விற்பனை மற்றும் பணம் சம்பாதிக்கும் வேலைகளால் கிடைத்துவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை. இங்கே ஒரு எக்ஸ்ஸாம்பில்க்கு போட்டோக்ராபியில் இருந்து மாதம் 30000/- தொகை கிடைத்தால் அதுவே செலவை நகர்த்த போதுமானதாக இருக்கிறது. நம்முடைய உடல் மற்றும் மனதின் உழைப்பை பெருமளவில் சேகரிக்கிறது. இது மட்டும் பணத்துக்கான யோசனையா என்று கேட்டால் கட்டாயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டிஜிட்டல் விஷயத்தை விற்று பணத்தை சம்பாதிப்பது என்பது எப்போதுமே மிகவும் கடினமான விஷயம்தான். கணினி விளையாட்டுக்களை விளையாடி பணத்தை டொனேஷன் மூலமாக பெறுவது எல்லாமே ஒரு காலத்தில் நன்றாக பேசப்பட்ட ஒரு விஷயம். கணினி விளையாட்டுக்களுமே அந்த காலகட்டத்தில் நன்றாக பேசப்பட்ட விஷயம்தான். ஒரு DSLR ஆக இருந்தாலும் HIGH END PC யாக இருந்தாலுமே வாங்கவேண்டும் என்றால் நிறைய முதலீடு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நான் என்னுடைய உயிரை கொடுத்து முயற்சி பண்ணினாலும் தேவையான பணத்தை சம்பாதிக்க முடியவே இல்லை. இதனாலேயே டிஜிட்டல் பணம் ஒரு டிஸ்கன்டின்யூ பண்ணப்பட்ட ப்ராஜக்ட்டாகவே எனக்கு மாறிவிட்டது !! இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட கருத்துப்பகிர்வு. இந்த வலைப்பூவின் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக அனைத்து பதிவுகளையும் படிக்கவும்.இந்த மாதிரியான டிஜிட்டல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் எனக்கு இன்னுமே புதிதாக தெரிந்துகொள்ள முடிந்தால் கட்டாயமாக நான் பதிவு பண்ணுகிறேன். ஆனால் கடல்போல நான் எழுதிய இந்த டெக்ஸ்ட் டேட்டாக்களில் நீங்கள்தான் கண்டறிந்துகொள்ள வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக