𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 31 ஜனவரி, 2024

MUSIC TALKS - AYYAYO NENJU ALAIYUDHADI AAGAYAM IPPO VALAIYUTHADI - VERA LEVEL PAATU !

அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 
உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல 
தின்ன சோறும் செரிக்கவே இல்ல குழம்புறேன் நானே 
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே 
என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேக்குறதே 

உன்னை தொடும் அனல்காத்து கடக்கையிலே பூங்காத்து 
குழம்பி தவிக்குதடி என் மனசு 
திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான்தானே 
எதிரில் நீ வரும்போது மிரளுறேன் ஏன் தானோ ?
கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே !

அய்யயோ நெஞ்சு - அலையுதடி - ஆகாயம் இப்போ - வளையுதடி 
என் வீட்டில் மின்னல் - ஒளியுதடி - ஓ என்மேல நிலா - பொழியுதடி 
 
மழைச்சாரல் விழும்வேளை மண்வாசம் மணம் வீச 
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன் 
கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே 
ஈரத்தில அணைக்கிற சுகத்தை பார்வையிலே கொடுத்தாயே 
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன 

ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் 
 
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 
உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல 
தின்ன சோறும் செரிக்கவே இல்ல குழம்புறேன் நானே 
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே 
என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேக்குறதே 
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக