இந்த படத்துக்கு பின்னால் ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது அது வேறு விஷயம். இப்போது பேஸிக்காக இந்த படத்தை கொஞ்சம் பார்க்கலாம். இங்கே ஒரு இமாஜின் பண்ண முடியாத கான்சேப்டை கூட சினிமாவால் நிஜவாழ்க்கைக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது, இதுக்கான பெஸ்ட் எக்ஸ்ஸாம்பில்தான் இந்த கிரேஸி ஏலியன் , இப்படி ஒரு படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருக்கவே முடியாது. ஒரு மிகப்பெரிய இண்டெலிஜன்ஸ் மற்றும் டெக்னோலஜி வலிமைகள் நிறைந்த பிளானேட்டில் இருந்து நம்முடைய பூமிக்கு சமாதான ஒப்பந்தத்துக்காக வந்து இருக்கும் ஏலியன் அதிகாரி உயிரினம் பார்க்க மங்கி போல இருப்பதால் எப்படியோ கன்ஃப்யூஷன் நடந்து ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்கில் பெர்ஃப்பார்மென்ஸ் மங்கியாக மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அடிப்படையில் இந்த படம் நகைச்சுவை காரணங்களுக்காக எடுக்கப்பட்டாலும் உயிரினங்களை மனிதர்களுக்கு அவர்களுடைய சுயநலத்துக்காக பேர்ஃப்பார்மென்ஸ் பொருட்களாக பயன்படுத்துவது சரியானது இல்லை , தவறான விஷயம் என்று அடிப்படையில் ஒரு கருத்து இருந்துகொண்டே இருக்கிறது. இங்கே என்னதான் இருந்தாலுமே ஒரு மொத்தமாக நகைச்சுவைக்காக வெளிவந்த படம் என்றாலும் முடிந்தவரைக்கும் எல்லாமே கம்ப்யூட்டர் மேட் என்றாலும் CGI என்றாலும் பொதுவாக உயிர்களை வதைப்படுத்துவதை நம்முடைய வலைத்தளம் எப்போதுமே ஆதரிப்பது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக