இந்த காலத்தின் பறந்து பறந்து அடிக்கும் ரோபோட் சண்டை காட்சிகளை விட்டுவிடுங்கள். ஒரு கம்ப்யூட்டர் கேம் போன்ற கணினி வரைகலை சண்டை காட்சிகளை விட்டுவிட்டு நிஜமாக அமைக்கப்பட்ட நிறைய குங்ஃபூ சண்டை காட்சிகள் நிறைந்த படம் உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். இந்த படத்தின் கதை : ஒரு கொடிய அரசாங்க அமைப்பின் கும்பலால் தன்னுடைய குடும்பம் , நண்பர்கள் மாறும் ஆசிரியர்கள் என அனைவரையும் இழந்து நிற்கும் சான் டே தப்பித்து கடைசியாக உயிர் பிழைத்து ஷாவோலின் கோவிலுக்குள் தஞ்சம் செல்கிறார். அங்கே தற்காப்பு கலையாக குங்ஃபூ சண்டை கலையை நிறைய வருடங்கள் செலவு செய்து கற்றுக்கொள்ளும் சான் டே பின்னால் ஒரு துறவியாக சொந்த ஊருக்கு வந்து மக்களை காப்பாற்றுவதுதான் இந்த படத்தின் கதை, இந்த படத்துக்கு Return to the 36th Chamber மற்றும் Disciples of the 36th Chamber. என்ற அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இந்த படம் ஒரு அருமையான KUNGFU படம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. இந்த படம் ஒரு மனுஷன் தன்னுடைய கஷ்டங்களை எல்லாமே கடந்து வெற்றி அடையனும் என்றால் எந்த அளவுக்கு போராட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் படம். உங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம். இங்கே நிறைய படங்களில் ஒரு அமைதியான வாழ்க்கைக்கும் ஒரு கோபமான வாழ்க்கைக்கும் இருக்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன என்று சொல்லி இருக்க மாட்டார்கள் , ஆனால் இந்த படத்தில் நன்றாகவே சொல்லியிருப்பார்கள். உங்களுக்கு எதனால் இந்த படத்தை ரெகமண்ட் செய்கிறேன் என்றால் பொழுதுபோக்கு அம்சங்களை விட்டுவிடுங்கள் , இந்த படத்தில் இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கலாம். தனித்த செயல்பாடு , கடின உழைப்பு , நம்பிக்கை , விடாமுயற்சி , உடல் பலம், மன உறுதி மற்றும் கட்டுப்பாடு என்று நிறைய நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே மையப்படுத்தி எடுத்த படம் இல்லை. இந்த படம் தற்காப்பு கலைகளுடைய மரியாதையை கண்டிப்பாக காப்பாற்றும் அளவுக்கும் ஒரு தற்காப்பு கலை என்பது எந்த அளவுக்கு அடிப்படையாயனது என்றும் ரொம்ப ரொம்ப நன்றாகவே சொல்லி இருக்கிறது. இந்த மாதிரி படங்களை நான் நிறையவே இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கிறேன். வேறு என்ன சொல்ல ? இந்த படத்தை உங்கள் வாட்ச் லிஸ்ட்டில் போட்டுவிட்டு இந்த வலைப்பூவை உங்கள் புக் மார்க்கில் போட்டுவிடுங்கள் ! உங்களுக்கு புண்ணியமாக போகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக