இயக்குனர் மைக்கேல் பெய் அவர்களின் டிரான்ஸ்பார்மர்ஸ் பட வரிசையின் அடுத்தடுத்த ஐந்து படங்களுக்கு பிறகு இந்த படம் பார்க்கும்போது ஒரு லைட்டான மறுதொடக்கமாக டிரான்ஸ் ஃபார்மர்ஸ் கதையாக இந்த படம் இருக்கிறது. துல்லியமான அனிமேஷன் மற்றும் எதிர்காலத்தை சேர்ந்தது போன்ற சண்டை காட்சிகள் மைக்கேல் பெயின் படங்களை தனிமைப்படுத்தவே 80 களில் மற்றும் 90 களில் அமைந்த பரீக்வல் படங்கள் மறுபடியும் டிரான்ஸ் ஃபார்மர்ஸ் படவரிசையை இன்னொரு தனி கதையாக தொடங்கும் திட்டமாக இருக்கிறகு, இந்த படம் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்களின் அதே யுனிவெர்ஸ்ஸில்தான் நடக்கிறதா இல்லையென்றால் இது ஒரு புதிய திரைப்பட வரிசையா என்பது இன்னுமே முடிவு செய்யப்படவில்லை. பீஸ்ட் வார்ஸ் என்ற ஹாஸ்ப்ரோ நிறுவன ஃபிரான்சைஸ்ஸின் ஸ்டோரிலைன் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த படம் தனி கதையாக அமைந்துள்ளது. டிரான்ஸ் ஃபார்மர்ஸ் கார்கள் போலவே உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்திகள் இருக்கும் மாக்ஸிமல்ஸ் இணைப்புகளை உருவாகும் "கீ" என்ற சாதனத்தை எடுத்துக்கொண்டு பிளானெட்களை சாப்பிடும் யூனிக்ரான் என்ற பூதாகரமான யுனிவெர்ஸ் டிரான்ஸ்ஃபார்மரிடம் இருந்து தப்பித்து பூமியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் யூனிக்ரான்னின் வேலைக்காரர்களாக இருக்கும் சண்டை போடுவதில் சிறந்த வலிமையான வீரர்களாக இருக்கும் டெரர்கான்கள் பூமியில் இந்த "கீ"யை தேடி வரும்போது நமது ஹீரோ ஆட்டோபாட்ஸ் இணைந்து களத்தில் குதித்து சண்டை போடுவதுதான் படத்தின் கதை. இந்த படம் பார்க்கும்போது கண்டிப்பாக மைக்கேல் யுனிவெர்ஸ்ஸில் இருந்து பிரித்து தனியாக கொண்டுவந்துவிடுங்கள் என்பதுதான் ரசிகர்களின் கருத்து. இல்லையென்றால் ஸ்டார் ட்ரேக் படங்கள் போன்று மாறுபட்ட டைம்லைன்கள் அல்லது மார்வேல் படங்கள் போன்று மல்டிவேர்ஸ் என்று கொண்டு வந்தாலும் பரவாயில்லை என்பதே ரசிகர்களின் கருத்து. GI JOE : RISE OF COBRA மற்றும் GI JOE : RETAILATION படம் பார்த்தவர்களுக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ்ல நல்ல சர்ப்ரைஸ் இருக்கிறது. நான் அடுத்ததாக வெளிவரப்போக்கும் TRANSFORMERS X GI JOE படத்துக்கு மரண வெயிட்டிங்ல இருக்கேன். இவ்வளவுதான் இந்த படத்துக்கான என்னுடைய கருத்துகள். இந்த படத்தை பற்றிய உங்களின் கருத்துக்கள் என்ன ? கமெண்ட் போடுங்கள் !! இந்த வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி !! மீண்டும் வருக !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக