கல்வியா ? செல்வமா ? வீரமா ?
அன்னையா ? தந்தையா ? தெய்வமா ?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ?
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?
கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா ?
பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா ?
கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா ?
வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா ?
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகர் ஏது ?
மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா ?
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா ?
தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா ?
இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக