𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

MUSIC TALKS - NILAVE NILAVE - HARIHARAN SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


<𝟑 .ᐟ


உன்னை ஒவ்வொரு 
இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற 
நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் 
ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் 
அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு

காதல் பேசும்
வயதுக்கு வந்த நிலா
உன்னை நெஞ்சை 
தீண்ட
அனுமதி தந்த நிலா
தன் மனதை சொல்லிவிட
தயங்குது 
தங்க நிலா

அட ஆதாம் ஏவாள்
பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை
ஈர்த்தது புதிய நிலா
தன் கனவுகளை
மெல்ல முனகும் நிலா
என் ஆயுளையே
அள்ளிப் பருகும் நிலா

பகலுடன் இரவும்
பதினெட்டு வருடம்
வளர்ந்தது இந்த நிலா
இது உனக்கே 
சொந்த நிலா

கண்ணில் கண்ணில்
கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில்
நினைவுகள் வீசுகிறாய்
தொட தொட நான் 
வருகையிலே
தொலைவினில் ஓடுகிறாய்

அட நானும் உன்னை
பார்ப்பது தெரியாதா
நான் பேசும் வார்த்தை
உனக்கது புரியாதா
அடி நான் இருந்தேன்
உன் ஞாபகமாய்
அதை சொல்லுகிறேன்
நான் சூசகமாய்
அருகில் நானும்
தொலைவில் நீயும்
இருந்தால் காதல் எது
மனம் கேட்கும் கேள்வி இது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக