𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

CINEMA TALKS - KARATE KID LEGENDS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




கராத்தே கிட் திரைப்படங்கள் அவற்றின் தனித்துவத்திற்காக பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒரு ஃப்ரான்சைஸ் ஆக இருக்கிறது. 

இந்த திரைப்படங்களில் ஸ்டைல்லில் ஒரு படத்தை எடுத்தால் இந்த படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் தற்காலத்து நடப்பு இளைஞர்களுடைய வாழ்க்கை மற்றும்.தற்கா தற்காப்பு முறைகளைப் பற்றிய ஒரு தெளிவான ஸ்டடி இருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பிரமாதமாக சென்று கொண்டிருக்கும் கோப்ரா காய் என்ற டெலிவிஷன் தொடரில் இருந்து நம்முடைய டேனியல் மற்றும் சென்ற கராத்தே கிட் படத்திலிருந்து நம்முடைய ஜாக்கிசான் சேர்ந்து இந்த படத்தை மிகவும் சிறப்பான ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக அமைத்துள்ளனர். 

சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட நம்முடைய ஜாக்கிசானின் இளைய மகன் தன்னுடைய மூத்த அண்ணனுடைய மரணத்துக்குப் பின்னால் தற்காப்பு கலைகளை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்ற கட்டாயத்தோடு அம்மாவோட நியூயார்க்கில் தங்குகிறான்.

ஆனால் இவனுக்காகவேஅளவெடுத்தது போல ஒரு பிரச்சனை வந்ததாக  நியூயார்க்கில் மிக அதிகமாக வெற்றியடைந்த ஒரு தற்காப்பு கலை ஸ்டூடண்ட் இவனுக்கு எதிராக சேலஞ்ச் செய்யும் போது தான்.

கராதே கிட் 2010 திரைப்படத்தில் எல்லாமே அந்த சின்ன பையனை மட்டும் சுற்றி அமைவது போல கதையை செய்திருந்தாலும் அது போல இல்லாமல் இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்குமே தனித்தனியாக கேரக்டர் டெவலப்மெண்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக சென்ற படம் போல இல்லாமல் தலைவர் ஜாக்கி சானுக்கு சண்டைக் காட்சிகளை கொடுத்து இந்தப் படத்துக்கான ரசிகர்களின் ஆவலை சிறப்பானதாக பூர்த்தி செய்து இருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக