𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 15 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #16


கடந்த காலத்தை நம்பி இருக்க வேண்டாம் - உலகம் எப்போதோ மாறிவிட்டது - நீங்கள் பாவப்பட்ட ஜென்மமாக புதிதான சிந்தனை இல்லாத அப்பாவியாக இருப்பது உங்களை நீங்களே தூக்கில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமான விஷயம் மக்களே ! இந்த உலகம் மற்றவர்களுடைய உழைப்பை பயன்படுத்துபவர்களைத்தான் அரசனாக மாற்றி அழகு பார்க்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் மக்களே - உலகம் எங்கேயோ சென்றுவிட்டது என்பதால் நீங்கள் ஒரு சின்ன புள்ளிக்குள் உங்களை அடைத்து வைத்த கட்டாயத்தில் வாழ வேண்டாம். இன்று இந்த நொடி நான் பார்க்கும் விஷயம் என்னவென்றால் நல்லவர்களாக இருந்தால் சீக்கிரமாக இறந்துவிடுவார்கள். கடவுள் கூட எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார் என்றும் சொல்லலாம். ஒரு நிறுவனத்தை உருவாக்க நான் பட்ட போராட்டங்களில் நிறைய தோல்விகளும் நிறைய அனுபவங்களும் இருக்கிறது. என்னுடைய புத்திசாலித்தனம் வளர்ந்து இருக்கிறது ஆனால் ஜெயிக்க இவைகள் மட்டுமே போதாது. இங்கே எல்லாமே பணம்தான். பணம் இல்லாதவர்கள் வானவில் போன்றவர்கள் - வேறும் காட்சிக்கு இருப்பார்கள் - காணாமல் போவார்கள் என்பதை தவிர்த்து அவர்களால் எந்த பலனும் இருக்காது. இந்த உலகத்தில் ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொன்னாலும் உங்களுடைய எண்ணங்கள் விளம்பரப்படுத்தப்படும்போது மட்டுமே நீங்கள் உங்களுடைய மதிப்பை பெற முடியும் ! 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக