𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - மக்களின் நடப்பு நிலை அறிந்து சினிமா செயல்பட வேண்டும் !


ஒரு கட்டத்தில் ஃபோன்களில் படம் பார்க்கலாம் என்ற இந்த காலத்து வசதிகள் நமது சினிமாவின் மவுசு குறைந்து போக ஒரு காரணியாக இருந்தாலும் இவை நேரடி காரணம் என்று சொல்ல முடியாது. ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அதிக கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு, அது ஒரு சராசரி படமாக இருந்தாலும் அது பணத்திற்கு மதிப்புள்ளதாக நிறைய சந்தோஷத்தை கொடுத்த FICTIONAL WORK என்று இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

இந்தப் பிரிவினைகளாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நல்ல வேலை செய்தாலும், அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை. குறைந்த தொகையில் தங்கள் குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், குறைந்த தொகையாக இருந்தாலும், ஒரு படத்தைப் பார்க்கும்போது, அந்தச் சிறிய தொகைக்குக் கூட, அந்தப் படம் தியேட்டரில் அதிக மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த விஷயத்திற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நம் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் என்ற படத்தை எடுத்துக் கொள்ளலாம்.  தங்கலான் படத்தைப் பொறுத்தவரை, விக்ரம் படத்திற்கு படத்தில் நடித்த கேரக்ட்டருக்கு வெகு சிரமப்பட்டு நடித்துக்கொடுத்து கதைக்கே ஒரு புது உயிரைக் கொடுத்திருந்தாலும் படம் இறுதியில் ஒரு சோகமான முடிவை மட்டுமே கொடுத்துள்ளது. 

ஒரு கதையாகப் பார்க்கும்போது இந்த வகையான விஷயங்கள் நல்லதாக இருந்தாலும், கொடுக்கக்கூடிய பணத்திற்கு, அது சரியான மதிப்பாக இருந்தாலும் அது ஒரு சோகமான விஷயம் என்பதால் குடும்பத்தோடு பணம் செலவு செய்து சினிமா பார்க்க செல்லும்போது ஏற்கனவே படும் அவர்களுடைய வாழ்க்கையின் கஷ்டங்களை இன்னும் அதிகரித்த ஒரு காரணியாக அந்த படம் மாறிவிட்டது என்றே சொல்லலாம் !


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக