𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 30 ஜூலை, 2025

SPECIAL TALKS - அறியாமை ஒரு பாவச்செயல் ! அறியாமை ஒரு பெரும்குற்றம் ! - 1


இந்த உலகத்தில் அறியாமையில் இருப்பவர்களையும் தங்களுடைய அறியாமையை கொண்டாடும் மக்களையும் சமீபத்தில் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால் வேல்யூ என்றால் என்ன என்பதையே இவர்களால் கண்டறிய முடியவில்லை. மிதமிஞ்சிய அறியாமை இவர்களுக்கு வேல்யூவை குறைத்து மதிப்பிட வைக்கிறது என்றுதான் இவர்களை சொல்ல வேண்டும். மிகப்பெரிய பெரும் குற்றங்களை எல்லாம் இவர்கள் அறியாமையில் கண்களை மூடிக்கொண்டு செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுதான் மிகவும் தவறான செயல். உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் இன்னொருவருக்கு பாதிப்பு உருவாக்க கூடாத வண்ணம் இருந்திருக்க வேண்டும். இருந்தாலுமே இவர்களுடைய அறியாமை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகளை அதிக்கப்படியாக உருவாக்கி கடைசியில் கொடியோரிடம் சிக்கிய அப்பாவிகளாக மாறி இருக்கிறார்கள் ! சப்கான்ஸியஸ் மானதாக ஏதாவது பாசிட்டிவ்வாக நடந்துவிடும் என்று நினைப்பது வேறு, எதையும் கற்றுக்கொள்ள வேண்டாம், எந்த விஷயத்துக்கும் சரியான புரிதலும் கொண்டிருக்க வேண்டாம், எல்லாமே இனிமே தானாக நடக்கும் என்று குருட்டுத்தனமாக வாழ்க்கையை வாழ்வது வேறு ! அறியாமையில் இருப்பவர்கள் பேசிக்காக தான் அறியாமையில்தான் இருக்கிறோம் என்று அறியும் முன்னதாகவே நிறைய பணத்தை இழந்துவிடுவார்கள் !

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக