𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 25 ஜூலை, 2025

CINEMA TALKS - KODITTA IDANGALAI NIRAPPUGA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



கோடிட்ட இடங்களை நிறப்புக - இந்த திரைப்படத்தை யூடியூப்-ல் வெளியிடப்படும் போதுதான் பார்க்க முடிந்தது இந்த திரைப்படத்தின் கதைக்களம் : ஒரு பணக்கார அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் தன்னுடைய வேலை விஷயமாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு வசதிவாய்ப்பு நிறைந்த மக்கள் தங்கி செல்லும் பங்களாவில் வாடகைக்கு தங்குகிறார். அந்த பங்களாவில் வீட்டு வேலை செய்யும் பெண்ணை அந்த இளைஞன் காதலிக்கிறான். அவளுடைய அழகில் அவன் மயங்குகிறான். 

ஆனால் இந்த கதையின் இந்த நிலையில் தான் இந்த படம் ஒரு நுணுக்கமான ரோமேன்டிக் சைக்கலாஜிகல்.ஃபில்மாக மாறுகிறது. 

இந்த படத்தை முதல் முறை பார்க்கும் பொழுதே இந்த பெண் இந்த ஹீரோவை கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம்தான் கொடுக்கப் போகிறாள் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த திரைக்கதை நகரும் போதும் நிதானமாக அந்த திரைக்கதை ஒரு சம்பவங்களாக சொல்லும் பொழுதும் ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கூட இவ்வளவு தெளிவாக சைக்கலாஜிக்கல் திரில்லர்-ஐ பேக்கேஜ் செய்ய முடியுமா என்ற அளவுக்கு ஒரு சிறப்பான மேக்கிங் இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம். 

இயக்குனர் / நடிகர் பார்த்திபன் அவர்களுடைய தெளிவான இயக்கம் இந்த படத்தை ஒரு கிளுகிளுப்பான குறைந்தபட்ச தரம் கொண்ட மோசமான திரைப்படம் போல போலி திரைப்படமாக கொண்டு செல்லாமல் ஒரு டீசண்டான ரொமான்ஸ் ரம்மிமாக கொண்டு சென்று இருக்கிறது என்பது பாராட்டுக்குரியது.

இந்த படத்துல கதை மிகவும் சுலபமானது. மேலும் பார்த்திபன் அவர்களுடைய பக்க பலமான நடிப்பு மற்றும் சரியான நேரத்தில் சரியான அளவு ஹ்யூமர் என்று இந்த படத்தின் டோனை மிகவும் சரியாகண்டல் செய்த விதம். இந்த படத்தை கண்டிப்பாக நிலைத்து நிற்கும் ஒரு படமாக ஜெயிக்க வைத்துள்ளது. 

இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பாருங்கள். யூடியூப்-ல் இந்தப் படம் இன்னும் அவைலபில் ஆக இருக்கும் என்று நம்புகிறேன். வார்னிங் : 20+ மக்களுக்கு மட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக