பினான்ஷியல் க்ரைம் திரைப்படங்கள் குறிப்பாக பண மோசடிகள் மற்றும் பைனான்சியல் மோசடிகள் சம்பந்தப்பட்ட படங்களை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்த திரைப்படம் நிச்சயமாக இது போன்ற படங்கள் வெளியான அந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்றாக தாராளமாக கருதலாம். சராசரி குடும்பப் பெண்ணாக இருக்க கூடிய நம்முடைய கதாநாயகி ஷாப்பிங்களில் இலவச கூப்பன் டோக்கன்களை பயன்படுத்துவதில் மிகவும் திறமைசாலி. ஒரு கட்டத்தில் தனக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்காக தான் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்று யோசிக்கும்போது அவரிடம் எதுவுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் ஒரு புதுமையான யோசனை அவருக்கு கிடைக்கிறது இதுபோன்ற டோக்கன்களை நாம் ஆகவே அச்சு அடித்தால் என்ன ? என்று இந்த விபரீதமான யோசனைக்கு ரெடிமேடாக கொஞ்சம் கூட ரிசர்ச் பண்ணாமல் ஒரு பிளானை உருவாக்குகிறார் இருந்தாலும் சர்ப்ரைஸ் ஆன விஷயம் என்னவென்றால் இந்த வகையில் மோசடியில் ஈடுபட்டு மிகவும் அதிகமான கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் இந்த மோசடியின் பின்னால் ஒரு இன்வெஸ்டிகேஷன் சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருந்ததால் இன்னும் சொல்லப்போனால் மாட்டிக்கொள்வோம் என்ற யோசனையே இல்லாமல் வரவு செலவு வேலைகளை பார்த்துக்கொண்டு இருப்பதால் கடைசியில் மாட்டிக் கொள்கிறார். ஒரு சில படங்கள் நமக்கு பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் இன்னொரு சில படங்கள் பணத்தை எப்படி சம்பாதிக்க கூடாது என்பதற்கு சொல்லிக் கொடுக்கும் வேலைகளை செய்கிறது இந்த படம் இரண்டாவது ரகம். இந்த படம் வெளியான ஆண்டில் என்று மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக நடிப்பு திறன் இந்த படத்தில் வேறு லெவல் இருக்கிறது. டார்க் நெட் என்றால் என்னவென்றே தெரியாமல் களத்தில் இறங்கி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதும் வேற லெவல் காமெடி கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்காக கைக்கு கிடைத்த எல்லா விஷயத்தையும் தாறுமாறாக வாங்கி போடுவதும் என்று ஒரு சில நகைச்சுவை காட்சிகள் மிகவும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆக இருக்கிறது. உண்மையான வாழ்க்கையில் நிஜமாகவே நடந்த சில விஷயங்களை இந்த தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதால் நடந்த சம்பவங்களுக்கான ஒரு கோர்வையான விறுவிறுப்பான திரைக்கதையை இயக்குனர் அமைத்திருப்பதால் என்பது இந்த படத்தை பொறுத்தவரையில் பாராட்டுக்குரியது. இந்த படத்துடைய கேமரா ஒர்க் மிகவும் பிரகாசமாக உயிரோட்டமாக இருக்கிறது. பிராக்டிகலாக வேலை பார்த்திருக்கக் கூடிய காட்சிகளும் இந்த படத்தில் நன்றாக இருக்கிறது. ஒரு விஷயத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அந்த விஷயத்தை நாம் அரைகுறையாக அரைகுறையான கற்றுக்கொண்ட வேலை பார்க்கக் கூடாது குறிப்பாக பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த படத்தில் இருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம் இலவசமாக கிடைக்கக்கூடிய கூப்பன் தானே என்று இல்லாமல் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டு இறங்காமல் கதாநாயகியும் அவருடைய தோழியும் எடுக்கக்கூடிய இந்த விளையாட்டு திரைக்கதையில் அமைந்த விதம் மிகவும் சிறப்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக