𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

STORY TALKS - EP.063 - ஃபேன்டஸியில் கொடுக்கும் பொய்களை நம்பவேண்டாம் !



ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அந்த நகரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் "இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள், பார்க்கலாம், "என்றொரு குறிப்பும் இருந்தது. தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார்?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி! ! ! வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில், " என்னா?? படம் சூப்பரா. என்று எழுதியிருந்தது. அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது. ஐயோ! "களவாணிப்பயலா" 'அவன்....? என்று.. "இலவசம்" யார் கொடுத்தாலும் அது கொள்ளையடிப்பதற்கே. இந்த உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை. உண்மையாக அன்பளிப்பு கொடுப்பவர்கள் கண்டிப்பாக எதுவுமே எதிர்பார்க்காமல் கொடுக்க முடியும். இருந்தாலும் நிறைய பணம் சம்பாதித்து வைத்து இருப்பவர்கள்தான் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பார்கள். குறிப்பாக தேர்தல் பணம் வாங்கும் ஆட்களுடைய நிலை கடைசியில் இப்படித்தான் போகிறது. இங்கே போட்டி போடுபவர்கள் இருவருமே பேராசை உள்ளவர்களாக இருப்பதால் நம்மால் என்னதான் பண்ண முடியும் சொல்லுங்கள் ? நம்ம ஆளு டிப் டாப்பாக ட்ரேஸ் பண்ணிக்கொண்டு வந்து 1,00,000 கம்பெனியில் முதலீடு பண்ணினால் 10 லட்சம் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். இது 90 சதவீதம் ஸ்கேமாக / மோசடியாக இருக்கலாம். இந்த காலத்தில் எப்போதுமே கவனமாக இருங்கள். மோசடிகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இங்கே இது எல்லாமே சும்மா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் - 20 இலட்சம் முதல் 1 கோடிக்கு மேல் பணம் இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக