இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படம் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை இன்ஸ்பியர் செய்து எழுதப்பட்டு ஒரு பயோ பிக்சர் என்று எடுக்கப்படும் ப்ராஜக்ட் என்பதால் இயக்குனர் காய் பியர்ஸ்ஸிடம் இருந்து ஒரு தரமான ஆக்ஷன் படைப்பு இந்த திரைப்படம் என்று சொல்லலாம். 1940 களில் வெளிநாடு உலக கடல் எல்லை பிரச்சனைகள் நடக்கும்போது நாட்டை பாதுக்காக்க சம்பளம் வாங்காத தேசத்துக்காக உயிரை கொடுக்க துணிவான மிகச்சிறந்த போர் தளபதிகள் இணைந்த ஒரு சிறிய குழு நேரடி பெரும் வணிக பாதுகாப்பு சப்ளை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் சாம்ராஜ்யத்தை மிகவும் சிறப்பாக எதிர்த்து தகவல்களை சேகரித்து துறைமுகத்தை காலி பண்ணுவதுதான் இந்த படத்தின் கதை. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கொரியோக்கிராபி சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளது. குறைவான ரன்னிங் லெந்த் இருப்பதால் படம் சட்டென்று முடிந்தது போல இருக்கிறதென்று சொல்ல முடியாது. திரைக்கதை அவ்வளவு வேகமாக அடுத்து என்ன நடக்கும் என்ற இண்டரெஸ்ட்டை கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்பான ஒரு படம் பாக்ஸ் ஆபீஸ்ஸில் அதிகமாக கலெக்ஷன் இல்லை என்பது வருத்தமானது. இது போன்ற ஒரு நல்ல படத்துக்கு சப்போர்ட் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் ஆகும். இந்த படத்தில் ஆக்ஷன் , அட்வென்சர் , பிலிம் மேக்கிங் , நடிப்பு என்று எல்லாமே தெளிவாக இருக்கிறது. இருந்தும் எதனால் இந்த படம் சூப்பர் ஹிட்டாக மாறவில்லை ? இந்த படத்துக்கு நல்ல போட்டேன்ஷியல் இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கான்ட்ரிப்யூஷனை கொடுத்து இருக்கிறது என்பதுதான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக