கிரிப்ட்டோ என்று சொல்லும் இந்த கண்ணுக்கே தெரியாத கற்பனை குறியீட்டு நாணயங்கள் ! இவைகளை பற்றி நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் குறிப்பாக பிட்காயின் போன்ற நாணயங்கள் உலக அளவில் பெரும் பிரபலமடைந்துள்ளன. இவைகள் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன என்று இருக்க முடியாது. இவைகளுக்கான மின்சார செலவு வெஸ்ட் ஆகும்பொது நிலக்கரி எரிப்பு மற்றும் காற்றில் இருக்கும் கார்பன் சுற்றுச்சூழல் தாக்கம் ரொம்ப மோசமாக இருக்கிறது/ 2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி, பிட்காயின் மட்டும் ஆண்டுக்கு 143 டெரா வாட் வெட்டி மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்று கணிக்கப்படுகிறதுஇது நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் மொத்த மின் ஆற்றல் பயன்பாட்டை மிஞ்சுகிறது. பிட்காயின் ஒரு நாடாக இருந்தால், இது உலகின் 27-வது மிகப்பெரும் மின்சார பயன்பாடு நாடாக இருக்கும். மற்ற அனைத்து குறியீட்டு நாணயங்களின் மின் ஆற்றல் பயன்பாடு உலகின் மொத்த மின் பயன்பாட்டின் 0.4% முதல் 0.9% வரை எனக் கணிக்கப்படுகிறது, இது ஆண்டுக்கு 120 முதல் 240 பில்லியன் கிலோவாட் ஆகும். இது உலகின் அனைத்து டேட்டா ஸென்டர் வகையறா கணினிகளின் மொத்த மின் பயன்பாட்டை விட அதிகமாகும். மனிதன் தன்னுடைய சுய நலத்துக்காக தான் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக குப்பைகளை போடுகிறான். இப்போது பணத்துக்கு ஆசைப்பட்டு உலகத்தை காப்பாற்றிய கண்டுபிடிப்பான கரேன்ட்டை வேஸ்ட் அடிக்கிறான். இப்படி மொக்கையாக மனித இனம் யோசித்தால் எதிர்காலம் ஞான-சூனியமாக இருள் மயமாக மாறும் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக