பொதுவாக கமேர்ஷியல் படங்களுக்கு என்று தனி ரசனை இருக்கதான் செய்கிறது . இந்த வகையில் இந்த படத்தை பற்றி கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும். "குருவி" என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் ஆக்ஷன்-நகைச்சுவை திரைப்படம் ஆகும். தரணி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், இந்த படத்தில் விஜய், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சுமன் ஆகியோரது நடிப்பு , பிரமாதமான பாடல்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவை மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றின் கலவையால் வெளிவந்த ஒரு படம் இந்த "குருவி". கமேர்ஷியல் படங்களை ரசிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விரைவில் பிரபலமானது. இந்த விவாதத்தில், "குருவி" பற்றிய பல்வேறு அம்சங்களையும் இந்த படம் வெளிவந்த காலங்களில் கமேர்ஷியல் படங்களின் கலாச்சார தாக்கத்தையும் ஆராய்வோம். சென்னை நகரில் ஒரு இன்டர்நேஷனல் அளவில் குடும்பங்களுக்கு தேவைப்படும் வெளிநாட்டில் கிடைக்காத பொருட்களை கொண்டு செல்லும் வியாபார தூதராக (அல்லது "குருவி) வேலை செய்கிறார். மலேசியாவில் அவர் தந்தையின் காணாமல் போனதை பற்றி விசாரிக்கும்போது கடப்பாவில் வைர சுரங்க கும்பலில் அவருடைய அப்பாவின் குழுவினர் மாட்டிக்கொண்டு இருப்பதை தொடர்ந்து பல சவால்களை அணுகி ஒரு சக்திவாய்ந்த இன்டர்நேஷனல் வைர கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு சதியை கண்டறிகிறார். மேலும் கடத்தல் கும்பல்களால் இவருக்கு ஆபத்து வரும்போது சண்டை கட்சிகளும் பிரமாதமாக இந்த படத்தில் அமைந்து இருக்கும் ! காதல் மற்றும் நகைச்சுவையுடன் படத்தின் கமேர்ஷியல் விஷயங்களை அனைத்தும் கொடுத்து எதிர்பார்த்த ஆடியன்ஸை சமநிலைப்படுத்துகிறது, இந்த படம் காமெடியுடன் கலந்து செல்வதால் முழுமையான ரசனை அனுபவத்தை வழங்குகிறது. வித்யாசாகர் அமைத்த பாடல்களால் பெரிய பட்ஜெட் காட்சித் தன்மைள கேமரா வேலை, கதை சொல்லுவதில் உதவுகிறது. மலேசியாவில் அமைக்கப்பட்ட காட்சிகள் சென்னைக் காட்சிகளுக்கு மாறுபட்ட பின்னணியை வழங்குகின்றன, படத்தின் காட்சித் தன்மையை மேலேற்றுகின்றன. குறிப்பாக இந்த படம் வெளிவந்த காலத்தில் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய ஒரு படம் என்றே சொல்லாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக