இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணிய படம் என்று சொல்லலாம். கடந்த டிஸ்க்கேப்பல் மீ 1 மற்றும் 2 படங்களோடு கம்பெரிஸன் பண்ணினால் கதையை விட்டுவிட்டு காமெடியை மட்டுமே ஃபோகஸ் பண்ணிய படம் என்று சொல்லலாம். குறிப்பாக மினியான்ஸ்ஸையும் க்ரூவையும் பிரித்து வைத்ததாலோ என்னவோ கேரக்ட்டர் டெவலப்மேன்ட் என்று எதுவுமே இல்லை. வில்லனும் பபுல்-காம் வில்லனாக அமைந்ததால் அல்லது புதிதாக ட்ரூ என்று ஒரு ட்வின் பிரதரை அறிமுகப்படுத்தி மினியான்ஸ்ஸை அவர்களோடு அனுப்பியதாலோ அல்லது ஆக்டிங் (அனிமேஷன் படத்திலும்) சரியில்லையா ? இது எல்லாமே கொஞ்சம் குழப்பமாக உள்ளது. ஸ்டோரி ஆர்க் அவ்வளவு தெளிவாக இல்லை. இந்த மாதிரி சேர்க்கப்பட்ட புதிதான விஷயங்கள் எல்லாம் பொருந்தியும் பொருந்தமாலும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக உள்ளது. மேடம் வெப் படம் சோனி யூனிவெர்ஸ்க்கு என்ன பண்ணியதோ அதையே இதுவும் மினியான்ஸ் யூனிவெர்ஸ்க்கு இந்த படம் பண்ணிவிட்டது. விஷுவல் எஃபக்ட்ஸ் மிக மிக பிரமாதமாக உள்ளது. இன்க்ரேடிபில்ஸ் 2 படம் லெவல்க்கு இருந்தது. இது ஒன்றை மட்டுமே பிளஸ் பாயிண்ட்டாக எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி எதிர்பார்ப்புக்கு குறைவாகவே இந்த படம் இருந்தது. கிளைமாக்ஸ் சரியில்லை. மற்றபடி காமெடிக்கு ஃபோகஸ் பண்ணியதால் காமெடியை குறைவு இல்லாமல் கொடுத்து இருக்கிறார்கள் - இந்த ஃப்ரான்சைஸ்ஸை டிஸ்க்கேப்பல் மீ 4 படத்தோடு முடித்து வைக்க இலுமினேஷன் ஸ்டுடியோ முடிவு பண்ணியதுக்கு காரணமும் இந்த படமாக இருக்கலாம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக