ஒரு சிறுகதை இருக்கிறது. பணத்தை எப்போதுமே அவசரத்தை உருவாக்க பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் விளைவு நெகட்டிவ்வாக முடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு முறை வேட்டைக்குப் போன அரசன் தன்னுடைய குழுவினரை விட்டு ஒரு காட்டிற்குள் தனியாக வந்து சிக்கிக் கொண்டான். நிறைய நேரம் தேடி காட்டுவாசிகளின் இருப்பிடத்தை அடைந்து அங்கே இருப்பவர்களிடம் பேசவே இப்போது அரசனைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு அவனது நாட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அங்கே இருந்த காட்டுவாசிகள் நான்கு பேர் ஒப்புக் கொண்டார்கள். அவர்களிடம் பேசிய போது நாட்டிற்குப் போய் சேர ஆறு நாட்களாகும் என்று அறிந்து கொண்டான். இருந்தாலும் அரசனுக்கோ வெகுவிரைவாக நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற விருப்பம். எனவே. அரசன் அவர்களிடம். "என்னை மூன்று நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் மூன்றாயிரம் தருகிறேன். இரண்டே நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் 5000 பொற்காசுகள் தருகிறேன். " என்றான். பல்லக்கு சுமந்தக் காட்டுவாசிகள் பொன்னுக்கு ஆசைப்பட்டு வேகத்தை கூட்டிக் கொண்டே போனார்கள். ஆனால். நடந்ததோ வேறு. ஆறு நாட்கள் கழிந்தும் காட்டுக்குள் உள்ளேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் பல்லக்கை கீழே இறக்கி வைத்து விட்டார்கள். அரசனுக்கு கோபம். ஆனால். அவர்கள் மன்னிக்க வேண்டும் மன்னா, "பொறுமையும், நிதானமும்" இல்லாமல் வேகத்திலேயே கவனம் வைத்தக் காரணத்தால் வழியைத் தவற விட்டு விட்டோம் என்று வேதனையுடன் கூறினார்கள். இங்கே அவசரப்பட்டதால் பொருளாதார இழப்பும் இருக்கிறது. மேலும் யோசித்து நிதானமாக வேலை பார்ப்பவர்களை கூட எதுவும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக முடிவெடுக்க வைத்துவிடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். வேலை பார்ப்பவர்களை இப்படித்தான் நடத்த வேண்டும் எந்த மமதை இருப்பது தவறானது. உங்களிடம் பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் எந்த பொருளையும் சேவையையும் தகவலையும் வாங்கிவிடலாம் என்று நினைப்பது வேல்யூயேஷன் எரர் என்று சொல்லப்படுகிறது. இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் நிதானமாக யோசித்து முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக