𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 21 செப்டம்பர், 2024

MUSIC TALKS - SATRU MUN KIDAITHA THAGAVALPADI THOLAINDHU PONADHU EN IDHAYAMADI UYIRE EN UYIRE EN UYIRE UYIRE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




சற்றுமுன் கிடைத்த தகவல்படி 
தொலைந்து போனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே
நிலை மாறாமல் தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்து போனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்
தீண்டும் போது நேர்ந்திடும்
உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் என்னை தீட்டினாய்
மறு நாள் உயிர் பூட்டினாய்
சங்க தமிழ் போல உன் மனம் 
சங்கமிக்கும் போது சந்தனம்
இதழ் ஊறாமல் இமை தேடாது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே
ஆசை கேட்கும் கேள்விகள்
அட நண்பகல் குளிர்கிறதே

ராத்திரிகள் என் ராத்திரிகள்
மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் ஞாபகம்
அட வன்முறை பேசியதே

எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா
இமை மூடாமல் இரை தேடாமல்
உன் உணர்வால் விழித்திருப்பேன்

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே
நிலை மாறாமல் தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக