𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

MUSIC TALKS - NAAN MALARODU THANIYAAGA YEN INGU NINDREN - EN MAHARAANI UNNAI KAANA ODODI VANDHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்\
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார் ?
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார் ?
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார் ?

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத 
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக