𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 30 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MINNALE NEE VANDHATHENADI ! EN KANNILE THONDRUM KAAYAM ENNADI ! EN VAANILE NEE MARAINDHU PONA MAAYAM ENNADI ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி 
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது 
என் மாளிகை அது வெந்து போனது 
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி 

என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே 
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே 
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா 
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி 
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது 
என் மாளிகை அது வெந்து போனது 
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக