𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - YEDHO SEIGIRAI YENNAI EDHO SEIGIRAAI YENNAI YENNIDAM NEE ARIMUGAM SEIGIRAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்


உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே 
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் 
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே


பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை 
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை
என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை 
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி 

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே


காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை
இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை 
புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை
நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக