𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - VIDIGINDRA POZHUTHU PIRINDHIDUMAA ? KADAL ALAI KADALIL KALANDHIDUMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா

உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே என்னை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்றதூரம் எதிரே நம் காதல் தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலுமோர் ஆயுதமாய் மாறிடுச்சு மெல்லமெல்ல என்னை கொல்ல துணிஞ்சுருச்சு 
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டுத்தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும் வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடிக்கொண்டதடா உன்னை விட கல்லறையே பக்கம்டா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக