𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - NINAITHU NINAITHU PAARTHAAL NERUNGI ARUGIL VARUVEN UNNALTHAANE NAANE VAAZHGIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 
எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் உனக்கு கண்ணே 
உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் 
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா ? 
தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்  
உடைந்து போன வளையலின் வண்ணமா ?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில் 
தோளில் சாய்ந்து கதைகள் பேச  நமது விதியில் இல்லை 
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசி போன வார்த்தைகள் எல்லாம் உனது பேச்சில் கலந்தே இருக்கும் 
உலகம்  அழியும் உருவம் அழியுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும் 
உனது விழிகள் என்னை மறக்குமா ?

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்  
வந்து வந்து போகும் 
திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும் 
ஒரு தருணம் என்னடா காதலா உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக