𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 14 ஜூலை, 2024

MUSIC TALKS - YAARO YAARUKKUL INGU YAARO YAAR NENJIL INGU YAAR THANDHAARO VIDAI ILLA ORU KELVI UYIR KAADHAL ORU VELVI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

நின்றாய் எங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி…
என்னால் வாழ ஆகாது
அன்பே வா

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப்போடும்
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன்
நான் தவம் பண்ணினேன்

கேட்ட கேட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு
இல்லை ஏதோ ஆய்விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால்தான்
அன்பே வா

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக