𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 26 ஜூலை, 2024

MUSIC TALKS - ADIKKADI MUDI KALAIVADHIL AVADHARITHAAI NEE ANUDHINAM ENNAI THOLAITHIDA VAZHI VAGUTHAAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனிமைகள் இன்று ரசிக்கிறேன் தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன் முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில் 
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன் 
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன் 
மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன் ஏன்

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனி மரம் வசிப்பதுபோலே ஏனோ இன்று 
புது வித கலகங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன் 
கடல் புறங்களில் திரிகிறேன் 
இமை விசிறியில் பறக்கிறேன் 
எதை எதையோ வியக்கிறேன்

காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம் 
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதை மறந்திட நான்

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம்
பிடிக்க உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க
தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள !
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல !
காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள 
என்னை கண்டேன் நான் வெட்கம் கொள்ள 
ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய் 
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன் !

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் 
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்

1 கருத்து: