இன்றைய தேதிக்கு மக்கள் வாட்ஸ் அப்பில் நடக்கும் ஒரு சின்ன டெக்ஸ்டை கூட அப்படியே கண்களை மூடிக்கொண்டு நம்பும் கலாச்சாரத்துக்கு மாறி விட்டார்கள். இந்த விஷயம் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. இன்றைக்கு தேதிக்கு சூரிய ஒளியில் இருந்து சக்தியை எடுக்கக்கூடிய சோலார் பேனல்களாக இருக்கட்டும் அல்லது வானை தொடும் உயரத்துக்கு நடப்படக்கூடிய அந்த மின்சார உற்பத்தி காற்றாலைகளாக இருக்கட்டும் இவைகளை தயாரிப்பதால் உருவாகக்கூடிய கார்பன்-டை-ஆக்சைடு அளவு இவைகளால் பயன்படுத்தப்பட்டு குறையப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட அதிகம் என்ற உண்மை மக்களில் எத்தனை பேருக்கு தெரியும் இருந்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான மின்சார தயாரிப்பு சாதனங்களை இப்படி கஷ்டப்பட்டு தயாரித்து கார்பன் டையாக்சைடு-ன் லெவலை வளிமண்டலத்தில் குறைக்கிறேன் என்று கம்பெனிகள் சொல்லும் எல்லா விஷயங்களும் பொய்தான் அல்லவா ?. ஜல்லிக்கட்டு பிரச்சினை போது இயற்கையாக வளரக்கூடிய மாடுகளின் வளங்களை அழித்து செயற்கையாக வளர்க்கக்கூடிய மாடுகள் கொடுக்கும் பாலை மட்டும்தான் உலகமே பயன்படுத்த வேண்டும் என்று மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தக்கூடிய அளவுக்கு துணிவுடன் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி இத்தகைய காரியங்களில்எ எந்த தைரியத்தில் இறங்குகிறது ? இவை அனைத்துமே கொள்ளையடித்து அவர்கள் சேர்த்த பணம் கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாளின் மூன்று வேலைக்கும் தங்கத் தட்டிலும் தங்க கரண்டிலும் சாப்பிடக்கூடிய இவர்களுக்கு சராசரி மக்களுடைய வாழ்க்கையில் படம் கஷ்டங்கள் எப்படித்தான் புரிய போகும் ? தாங்கள் பயன்படுத்திய பின்னால் பொருட்களை குப்பையில் தூக்கிப் போடுவது போல இவர்களால் எந்த பயன்பாடும் இல்லை என்று ஏழை மக்களை இவர்கள் அலட்சியமாக பார்க்கக்கூடிய அந்த பார்வை எத்தனை பேருக்கு பரிச்சயமானது ? இந்த அலட்சியமான பார்வையை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ? பணம் இருப்பதற்காக இப்படி சராசரி மக்களுடைய வாழ்க்கையை அடித்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா ? இவர்களை நோய்களை உருவாக்குவார்களாம் இவர்களே அந்த நோய்களுக்கான மருந்துகளையும் விற்பனை செய்வார்களாம். இவர்கள் பண்ணும் எல்லா விஷயங்களும் பட்டப்பகலில் மக்களுடைய கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கும் பட்டப்பகல் கொள்ளையாக தான் இருக்கிறது. சட்டத்தில் எலி செல்லும் அளவுக்கு சிறிய சிறிய ஓட்டைகளை கண்டுபிடித்து கொண்டு இவர்கள் மிகவும் தெனாவெட்டாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ஒருநாள் இல்லையென்றால் ஒரு நாள் இந்த கம்பெனிகளுடைய ஆட்டம் நிச்சயமாக முடிவுக்கு வரும் என்றுதான் நம்புகிறேன். ஒரு விருப்ப பதிவு என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இது ஒரு விருப்ப பதிவுதான். இந்த சமுதாயத்தில் இவர்களுடைய கட்டுப்பாட்டை அறவே நீக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இந்த சமுதாயத்தை தங்களுக்காக வேலை பார்க்கும் அடிமை கூட்டமாக மாற்றவும் தயங்க மாட்டார்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக