𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

SIMPLE TALKS - இந்த கான்ஸேப்ட் புதுசாக இருக்கிறதே !!



தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் அரசியல்வாதியை தேர்ந்தெடுத்த பிறகு ஆட்சியின் நிலை :


அரசியல்வாதி: ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.

மக்கள்: நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா. ?

அரசியல்வாதி: கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.

மக்கள்: நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா. ?

அரசியல்வாதி: ஆம். நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.

மக்கள்: உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா. ?

அரசியல்வாதி: அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.

மக்கள்: நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா. ?

அரசியல்வாதி: நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்!

மக்கள்: ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா. ?

அரசியல்வாதி: உங்களுக்கென்ன பைத்தியமா. அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை.

மக்கள்: உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா. ?

அரசியல்வாதி: ஆம்.

மக்கள்: நீங்கள் தான் எங்கள் தலைவர்.

( அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு. )

மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.

1 கருத்து:

  1. காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். “நீ சென்ற பிறகு எனக்கு ஒரு பாய்ஃப்ரேன்ட் கிடைத்தான். அவனைத்தான் நான் கல்யாணம் பண்ண போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என்னுடைய புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு” என்று அதில் எழுதியிருந்தது.
    அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான்.
    கூடவே, ஒரு கடிதம் இவ்வாறாக எழுதினான் “உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை எனக்கு திருப்பி அனுப்பி விடவும்!” #THEBOYS

    பதிலளிநீக்கு