இந்த படத்துக்கு முந்திய படம் போல ஒரு பெர்ஃப்ஃபேக்ட் காமெடி என்டர்டைன்மேன்ட் இந்த படம். எலியும் பூனையுமாக எப்போதுமே வீடியோகேம்களின் பறவை வகையறாக்கள் மற்றும் பன்றிகளின் வகையறாக்கள் ஒன்றாக சேரந்து ஒரு மிஷன்னை முடிக்க வேண்டும். கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. கூட இருப்பவை அனைத்துமே தொல்லைகள் என்று இவைகள் ஆரம்பத்தில் நினைத்தாலும் அவைகளுடைய சொந்த தீவை பனியாக கொட்டும் தீவை ஆட்சிபண்ணும் கழுகு குடும்பத்தில் இருந்து காப்பாற்ற போடப்படும் அனைத்து பிளான்களில் பாதி சிறப்பான சக்ஸஸ் ஆவதும் மீதி தரமான சொதப்பல் ஆவதுமாக போன படம் போலவே காமடிக்கு பஞ்சம் இல்லாமல் கதையை எடுத்து இருக்கின்றார்கள். விஷ்வல் ப்ரேஸேன்டேஷன் வேற லேவேல். போன படம் போலவே தரை லேவல்க்கு இறங்கி தரமான சம்பவங்களை திரைக்கதையில் செய்து இருக்கிறார்கள். இந்த படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக டிஸப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காத ஒரு படைப்பு இந்த கோபமான பறவைகள் - தி கன்க்ளுஷன் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக