𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 28 மார்ச், 2024

MUSIC TALKS - THALAATUM POONGATRU NAAN ALLAVAA SONG LYRICS - பாடல் வரிகள் !





தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !
வருவாயோ… வாராயோ… ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !


நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்


தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !


எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீ அல்லவா ?




தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !
வருவாயோ… வாராயோ… ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக