𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 29 மார்ச், 2024

MUSIC TALKS - RASAVE UNNAI VIDAMAATTEN ENNA AANALUM VETKAM VIDAMATTEN LYRICS - பாடல் வரிகள் !


ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
ஓயாமலே மழைத் தூறலாம்
போகாதய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்

கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி  உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன்
தோழி எனக்கேதய்யா ? ஒரு தூதுதான் போக
தேதி என்ன சொல்லய்யா மஞ்சள் தாலிதான் போட
பாவை உன் பாட்டுத்தான் பாடினாள்
 
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
 
கிக்கி கிக்கியென்று  வண்ணக்கிளியொன்று சத்தமிட்டே செல்லும்
குக்கூ  குக்கூவென்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை சொல்லும்
ஆலம் விழுதாகவே மனம் ஆடிடும் போது 
நானும் அது போலவே அலைந்தாடிடும் மாது
 பாவை உன் பாட்டுத்தான் பாடினாள்
 
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
ஓயாமலே மழைத் தூறலாம்
போகாதய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக