ஹங்கர் கேம்ஸ் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த நினைக்கும் சராசரி கல்லூரி மாணவராக இருக்கும் கொலாரஸ் ஸ்னோவை கட்டாயப்படுத்தி கேம்ஸ்ஸில் கலந்துகொள்ளும் லுஸி கிரே என்ற பெண்மணிக்கு சண்டை போடுவதற்கு அட்வைஸ் கொடுப்பவராக போஸ்டிங் போட்டு கொடுத்துவிடுவார்கள். இவரும் எப்படியோ நடக்கும் ஒரு ஒரு மோசமான கொலை முயற்சியில் இருந்தும் லூஸியை காப்பாற்றுவார். ஆனால் அப்படி காப்பாற்றிய காரணத்தால் ஸ்னோ இன்னும் நிறைய தடைகளை சந்தித்து வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதுதான் இந்த படத்தின் கதைக்களம். ஒரு பிரிக்வல் திரைப்படம் என்பதால் கிளாசிக் காலங்களின் கலர் பேலட் பயன்படுத்தி ஒரு ஒரு காட்சியையும் சிறப்பாக எடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக ஹங்கர் கேம்ஸ் படங்களில் காணப்படுகின்ற அடுத்து என்ன நடக்கும் ? அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் இந்த படத்தில் நன்றாக கொண்டுவரப்பட்டு உள்ளது. நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. கேரக்டர் டெவலப்மென்ட் ஒரு கதைக்குள் நிறைய காலகட்டம் இருப்பதால் நன்றாகவே இருக்கிறது. விசுவல் எபெக்ட் மற்றும் பேக்கிரவுண்ட் ஸெட்ஸ் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு இந்த படம் பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு வொர்த்தான ஆக்சன் அடவென்சர் படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். உலகத்தரம் நிறைந்த சினிமா என்ற வகையில் இந்த படம் மிகவும் முக்கியமான ஒரு படம். கண்டிப்பாக பாருங்கள். இந்த படத்தின் கதை உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் நீங்கள் ஹங்கர் கேம்ஸ் திரைப்பட வரிசையின் முந்தைய படங்களை பார்த்து இருந்தால் இந்த படத்தின் கான்ஸெப்ட் உங்களுக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ! இந்த பழைய படங்களை எதனால் பார்க்க சொல்கிறேன் என்றால் இந்த படத்தில் எப்படி சாப்பாட்டுக்கே போராட்டம் நிறைந்த உலகத்தில் சுயநலம் பிடித்த அரசியல் ஆட்களால் ஹங்கர் கேம்ஸ் என்ற உரிமைகளுக்காக உயிரை இழந்து சண்டை போட்டு இறந்து போகும் அளவுக்கு பாதிப்புகளை அடைந்து போராடும் வீர விளையாட்டுகளை இளைஞர்கள் கட்டாயமாக விளையாட வேண்டும் என்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டு பல வருடங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தது என்று சொல்லி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக