இங்கே ஒரு முறை பணம் கொடுக்கும் முறை ( ONE TIME PAYMENT ) மற்றும் மறுபடி மறுபடி பணம் கொடுக்கும் முறை (RECURRING PAYMENT) என்று இருவகை முறைகள் இருக்கிறது. இவற்றில் முன்னது மிகவுமே சிறப்பானது. ஆனால் அடுத்ததாக இருக்கும் விஷயம் ரொம்ப ஆபத்தானது , (RECURRING PAYMENT) என்ற முறையில் கடன்களை வாங்கிக்கொண்டு இருந்தால் கடன் குறையவே குறையாது. கடன் இன்னுமே அதிகமாகி தலைக்கு மேலே தலைவலிதான் வரும் , கடன் என்பது கடலின் அலைகள் போன்றது , நிறைய வட்டியை கட்டிக்கொண்டே இருந்தால் அசலை எப்போதுதான் அடைக்க முடியும் !நம்ம உழைப்பின் ஒரு பகுதியை இன்னொருவருக்கு கொடுக்கும்போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த இன்னொருவரின் வாழ்க்கையை முன்னேற வைக்க நம்முடைய வாழ்க்கையை பின்னுக்கு தள்ளுவதுதான் வட்டியாக பணம் கொடுப்பது. வெறும் 30000/- தொகை 3 சதவீத வட்டி என்னும்போது 10 வருடங்களுக்கு கணக்கிட்டால் 138000/- ரூபாய் என்று மாற்றம் அடைவதை நினைவில் கொள்க. கடன்கள் நம்முடைய பாரத்தை மட்டும்தான் அதிகப்படுத்துகிறது. வாடகைக்கு பொருட்களை வாங்குவதும் வாடகை வீட்டில் தங்குவதும் கூட ஒரு வகையான கடன் மற்றும் வட்டி போன்றதுதான். இங்கே அசலை தொகையாக பெறாமல் பொருளாகவோ அல்லது செயலாகவோ பெறுகிறோம். நம்முடைய பணத்தின் அருமை புரிந்தவர்களுக்கு நம்முடைய வாழ்க்கையில் கடன் இருந்தால் எவ்வளவு சிரமமானது என்ற உண்மையான நிலை கண்டிப்பாக புரிந்து இருக்கும். இன்றைய காலத்தில் மாடர்ன் நாட்களில் கூட ஒரு ஸ்டார்ட் அப் பண்ணவேண்டும் என்றால் கடன் கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறிப்பாக கையில் எதுவுமே இல்லாதபோது கிடைத்த வாய்ப்பை நம்மால் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா ? அதனால்தான் கடன்களை வாங்கிவிடுகிறோம். வருங்கால நாட்களில் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்து நமக்கு பயன்பட வேண்டிய நிகர இலாபத்தினை கடனாக கடனின் வட்டியாக இன்னொருவருக்கு கொடுக்கிறோம். கடனை மட்டுமே அடைக்காமல் விட்டுவிட்டால் வாழ்நாள் முழுக்க கடன்கள் இருந்துகொண்டே இருக்கிறது இல்லையா ? நாம் எதுக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது என்றால் நிறைய நேரங்களில் மெடிக்கல் எமேர்ஜன்ஸி என்ற காரணத்துக்காக கடனை வாங்கவேண்டியது உள்ளது. இப்படி வாங்கும் கடன்கள் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் வட்டி மட்டும் பல வருடங்களுக்கு கட்டவேண்டியது உள்ளது. தனிநபர் கடனை விட ஒரு நிறுவனமாக ஆரம்பிக்க பெரும் தொகை வாங்கப்பட்டால் மறுபடியும் அந்த தொகையை கஷ்டப்பட்டு சம்பாதித்து முழுவதுமாக திரும்ப கொடுத்து கடனை அடைப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது அல்லவா ? இதனால்தான் சாப்பாடு வாங்கக்கூட பணமே இல்லாத நிலையிலும் கடன் வாங்குவது மிகவும் ஆபத்தான விஷயமாக இருக்கிறது. இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக