நீங்கள் PRODIGY (பரோடிஜி) என்ற எக்ஸ்ட்ரா ஆர்டினரியான நினைவுத்திறன் சக்திகளை உள்ளவர்களை பார்த்து இருக்கின்றீர்களா ? இவர்களுடைய நினைவுத்திறன் சார்ட்ஸ்களில் அடங்காது. வாழ்க்கையின் சின்ன சின்ன டீடைய்ல்களையும் இவர்கள் நினைவில் வைத்துக்கொண்டு இருப்பதால் இவர்களுடைய அறிவு மிக மிக நுணுக்கமாக செயல்பட இவர்களுக்கு அனுமதி இருக்கிறது. வேகமாக கணிதம் போடுகிறார்கள். சப்ஜெக்ட்களில் பின்னி எடுக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் என்று வந்தாலும் ஒரு அளவுக்கு நல்ல பெர்ஃப்பார்மேன்ஸ் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் வாழ்க்கையில் ஒரு சில நண்பர்களை பார்க்கிறேன். இவர்களுடைய கணிக்கும் திறன் மற்றும் நடந்துகொள்ளும் பக்குவம் வேற லெவல்லில் இருக்கிறது. கணக்கில் அடங்காத அளவுக்கு ஸ்மார்ட்னஸ்ஸை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிக பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் எல்லோருமே ஆசைப்படும் ஸேட்டில்மேன்ட்ஸ்ஸை அடைந்துவிடுகிறார்கள். இந்த வலைப்பூவை எழுதும் நான் இந்த கணக்கில் சேர மாட்டேன். என்னுடைய சொந்த கதை சோகக்கதைகள் இந்த வலைப்பூ வழியாக உலகம் அறிந்ததே. இங்கே எல்லோருமே சமம் என்ற கருத்துக்கு கண்டிப்பாக நேர் எதிரான ஒரு விஷயம்தான் இதுபோன்ற ஜீனியஸ்கள் , சொல்லப்போனால் இங்கே உண்மையான சூப்பர்பவர் என்பது இதுதான் என்று நினைக்கிறேன். நல்ல சத்துமானமான சாப்பாடு , போதுமான உறக்கம் , உடற் பயிற்சி , நடந்துகொள்ளும் விஷயங்களில் தெளிவு , அதிக கவனம் மற்றும் நடக்கும் விஷயங்களை பதிவு பண்ணிக்கொள்ளும் திறன் எல்லாமே இருந்தால் நமது கதாநாயகர்களுமே இவர்களை போல வெற்றிகளை அடைய முடியும் என்பது என்னுடைய கருத்து. இருந்தாலும் இவர்களுடைய நினைவுத்திறன் வேற லெவல். சும்மா 1.389299108308939827424282760 என்று ஒரு எண்ணை நீங்கள் சொல்லி பாருங்களேன். ஒரு சின்ன மிஸ்டேக் கூட இல்லாமல் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். எப்படி இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நினைவுத்திறன் இவர்களுக்கு இருக்கிறது என்பது நான் பெர்ஸனலாக பார்த்து வியந்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக