𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 13 ஜனவரி, 2024

CINEMA TALKS - IMAIKA NODIGAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இமைக்கா நொடிகள்  - இந்த படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தொடக்கத்தில் இருக்கும் வேகத்தை கடைசிவரை கதையில் பரபரப்பாக கொண்டு செல்லும் காட்சிகளில் மிகவும் தரமான வொர்க் கொடுத்துள்ளது. கதையில் நிறைய கமேர்ஷியல் விஷயங்கள் மற்றும் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து இருந்தாலும் ஸ்டோரிலைன்னை கதை கடைசிவரைக்கும் கொண்டுசென்றுவிட்டது. சகோதரர்களாக நயன்தாரா மற்றும் அதர்வா முரளி தங்களுடைய கேரக்ட்டர்ஸ்ஸில் இருக்கும் பொடன்ஷியல்லை புரிந்துகொண்டு படத்தின் திரைக்கதைக்கு ஏற்றவாறு வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், நெகட்டிவ் ரோல்லில் வில்லனாக நடித்துள்ள அனுராக் அவருடைய கேரக்ட்டரில் சிறப்பாக ஒரு பெர்ஃப்பார்மேன்ஸ் கொடுத்து இருக்கிறார். நம்முடய சினிமாவில் கண்டிப்பாக தமிழ் ஆடியன்ஸ்க்கு அவருடைய நடிப்பு நன்றாகவே பிடித்து இருப்பதை மறுக்க முடியாது. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் வசனங்கள் துருதுருவென்று படத்தின் வேகம் குறையும்போதெல்லாம் சுறுசுறுப்பாக படத்தை கொண்டு செல்ல உதவுகிறது. ரெகுலர் ஆக்ஷன் திரில்லர் ஃபார்முலாவாக இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று கெஸ் பண்ணாத அளவுக்கு கதையை மிகவும் சரியாக பிலிம் மேக்கிங் பண்ணியதால் இப்போது வரையில் ரசிக்கும்படியான ஒரு முறை எல்லோரும் சான்ஸ் கொடுத்து பார்க்க வேண்டிய படமாக இமைக்கா நொடிகள் என்ற இந்த படம் இடம்பெற்று உள்ளது.இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக