ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் நிறைய கமேர்ஷியல் படங்களில் ஸ்டைல் இருப்பதை ஒரு எதார்த்தமான காதல் கதையிலும் பார்க்க முடிகிறது , அல்லது இண்டென்ஸ்ஸான ஆக்ஷன் படங்களிலும் பார்க்க முடிகிறது , ஆனால் இந்த படம் நான் பார்த்ததில் ரொம்பவுமே வித்தியாசமான ஒரு காதல் கதை , தன்னுடைய வாழ்க்கையில ஒருவரை உண்மையாக காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்ளும் கதாநாயகி அவருடைய கணவரை இழந்தாலும் ஒரு பையனை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார், இந்த வகையில் தொழில் முறை பயணமாக அங்கே வரும் நமது கதாநாயகர் அங்கே கதாநாயகியின் கடந்தகாலத்தை தெரிந்துகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறார், கதாநாயகனும் அவருடைய வாழ்க்கையில் அவருடைய மனைவியை கதாநாயகியின் கணவர் காலமான அதே விபத்தில் இழந்து இருக்கிறார். கதாநாயகி இப்போது கதாநாயகனின் காதலுக்கு சம்மதம் சொல்வாளா ? அல்லது மறுப்பாளா ? - இதுதான் படத்துடைய கதை , இந்த படத்தை பொறுத்தவரை படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கிறது, காமிரா வொர்க் மற்றும் கேஸ்டிங் டாலெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப பெஸ்ட், ஒரு இன்டர்நேஷனல் சினிமா ஸ்டாண்டர்ட்ஸ்க்கு எடுக்கப்பட்ட ஒரு படமாக மாற அனைத்து முயற்சிகளையும் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு படத்தில் மாதவன் வில்லன்களை ஷட்டர் கேட்டில் அடைத்து வெளுத்து கட்டுவாரே அந்த படம் போல ஆக்ஷன் அட்வென்சர் காதல் இந்த படம் இல்லை என்றாலும் வாழ்க்கையில் எதார்த்தமாக ஒரு செடி மலர்வது போன்ற ஒரு காதலையும் அதனுடைய ப்ராக்ரஸ்ஸையும் மட்டுமே இந்த படம் சொல்வதால் வெளிவந்த காலகட்டத்தில் இந்த படம் கண்டிப்பாக பெஸ்ட்தான். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக