𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

CINEMA TALKS - ORU NALLA NAAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த படம் பார்ப்பதற்க்கு ரொம்ப சாதாரணமான படம் போலத்தான் இருக்கும் ஆனால் உண்மையில் நம்ம தமிழ் சினிமாவில் வெளிவந்த ரொம்ப கிரியேட்டிவ்வான டார்க் ஹூயூமர் படம் இந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லறேன், இந்த படம் வெளிவந்தபொது பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் டிஸப்பாயிண்ட் பண்ணிவிட்டது என்றாலும் உண்மையில் ரொம்ப கிரியேட்டிவ்வான ஒரு படம் , வாழ்க்கையில் எதுவுமே சாதிக்காமல் இருக்கும் வெளியில் தன்னை தைரியமாக காட்டிக்கொண்டாலும் உள்ளே பயந்த சுபாவமாக இருக்கும் கல்லூரி ஸீனியர் ஹரிஷ் , இவருக்காக என்ன வேண்டுமென்றாலும் பண்ணும் ஒரு உயிர் நண்பன் சதீஷ், ஆந்திர மாநிலத்தில் பாரம்பரியமாக கொள்ளைகளை செய்வதை தொழிலாக பண்ணும் எமசிங்கபுரம் என்ற கிராமத்தில் எப்போதோ சின்ன வயதில் நிச்சயதார்த்தம் பண்ணியதால் பல வருடங்களுக்கு பின்னாலும் கல்லூரிக்கு வந்து கதாநாயகியை கண்டுபிடித்து வில்லன் தூக்கி சென்றுவிடவே நண்பன் உதவியோடு துணிவாக சென்று நமது கதாநாயகர் காதலியை கரம்பிடிக்கிறாரா என்பதுதான் இந்த படத்தின் கதை. படம் மொத்தமும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக நகர்கிறது. கிளைமாக்ஸ் வரைக்கும் எதிர்பார்ப்புகளை கொண்டுவந்து கதையின் திரைக்கதை நன்றாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்றால் வசனங்கள் படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். ஒரு சில நேரங்களில் படம் மிகவும் அவுட் ஆஃப் பாக்ஸ்ஸாக சென்றுவிடுகிறது. இன்றைக்கு தேதிக்கு இன் கம்பேரிஸன் என்று பார்த்தால் டாக்டர் , மார்க் ஆன்டனி , என்று கிரியேட்டிவ்வான டார்க் ஹூயூமர் படங்கள் நிறைய வந்து இருந்தாலும் இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் இந்த படம் பேர்ஸனலாக எனக்கு பிடித்து இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக